இந்தியாவின் மகா போதி நிறுவனம் (MBSI) தலைமையகம் கொல்கத்தாவில் (முன்னர் கல்கத்தா பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு காலத்தில் தலைநகராக இருந்தது.) எண் 4A, பங்கிம் சாட்டர்ஜி தெருவில் அமைந்துள்ளது, இது பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக பழைய தலைநகரில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்றாகும். இது ஸ்ரீ தர்மராஜிகா சைத்திய விகாரை என்று அழைக்கப்படுகிறது. இதனை 1920 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி வங்காளத்தின் பிரிட்டிஷ் கவர்னர் லோர்ட் ரொனால்ட்ஷே அவர்கள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் , கொல்கத்தா முனிசிபல் கவுன்சில் MBSI கட்டிடத்தை பாரம்பரிய கட்டிடமாக அறிவித்துள்ளது.
1891 ஆம் ஆண்டு தான் அனகாரிக தர்மபால புத்த கயாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பும் வழியில் கொல்கத்தா சென்றடைந்தார். புத்த கயாவை நிர்வகிப்பதில் பௌத்தர்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்ட அவர் சபதம் எடுத்தார், மேலும் பிரசாரத்திற்காக நிதி திரட்டுவதற்காக பர்மாவின் ரங்கூனுக்குச் செல்ல முடிவு செய்தார். அந்த காலகட்டத்தில் சில பர்மியர்கள் புத்த கயாவிற்கு வந்து சென்றனர்.
தர்மபால, சிலோன் தியோசபிகல் நிறுவனத்தின் உறுப்பினராக இருந்ததால், கொல்கத்தாவில் பெங்கால் தியோசபிகல் நிறுவன உறுப்பினர்களால் அவருக்கு விருந்தளிக்கப்பட்டது, அவர் சங்கத்தின் செயலாளரான நீல் கமல் முகர்ஜியுடன் தங்கினார். முகர்ஜி தர்மபாலவின் வாழ்நாள் நண்பராக இருக்க வேண்டும் என விரும்பினார் , அதனால் தர்மபால தனது மருமகன் ஒருவருக்கு நீல் கமால் என்ற பெயரைக் கொடுத்தார்.
எதிர்காலத்தில் பௌத்த தலங்களைப் பார்வையிட வரும்போது பௌத்தர்கள் தங்குவதற்கு ஒரு இடம் தேவை என்றும் அவர் உணர்ந்தார். இலங்கையில் மஹா போதி சொசைட்டியை உருவாக்கிய பிறகு, புத்த கயா மற்றும் பிற இடங்களில் தனது இந்திய பிரசாரத்திற்கான தலைமையகம் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார் . கொல்கத்தாவில் MBS தலைமையகத்தின் இந்தியக் கிளையைக் கட்ட அவருக்கு ஏறக்குறைய மூன்று தசாப்தங்கள் தேவைப்பட்டன,
அதற்கு ஸ்ரீ தர்மராஜிகா சைத்ய விஹாரா என்று பெயரிட்டார். அதற்குள் (1915) இலங்கையில் நடந்த இனக் கலவரம் காரணமாக கொல்கத்தாவை "கடல் அல்லது தரை மார்க்கமாக" விட்டு வெளியேற காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தர்மபால அனுமதிக்கப்படவில்லை. இலங்கையில் அவரது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம், வங்காளத்தின் லெப்டினன்ட் கவர்னரை அவரை ஒரு பிரச்சனையாளராகக் கருத வைத்தது . அவர் தடுப்புக்காவலில் இருந்த நேரத்தை கட்டிடக்கலை மற்றும் தலைமையகத்தின் கட்டுமானப் பணிகளில் செலவிட்டார்.
அதே ஆண்டு, MBS ஆனது மகா போதி சொசைட்டி ஒஃப் இந்தியா (MBSI) என்று பெயரிடப்பட்டது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான சேர் அசுதோஷ் முகர்ஜி எம்பிஎஸ்ஐயின் தலைவராகவும், தர்மபால செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். புதிய கட்டிடத்திற்கான நிதியில் பெரும்பகுதி ஹவாயின் திருமதி மேரி ஃபாஸ்டர் ரொபின்சன் என்பவரிடமிருந்து வந்தது
பரோடா மகாராஜா கெய்க்வோர்ட் ரூ. 10,740. அனகாரிகா அவரது தந்தை, தாய் மற்றும் ஒரு சகோதரர் மற்றும் அவரது மனைவியின் நினைவாக 11,000. கலாநிதி மற்றும் திருமதி சி. ஏ. ஹேவாவிதாரண , ரூ. 2,000, திரு, திருமதி என்.டி.எஸ். டி சில்வா ரூ. 1,500, திரு. பி.ஏ. பெரிஸ் ரூ. 1,000 மற்றும் சிறு நன்கொடைகள் பலரிடமிருந்து கிடைத்தன ஒரு பிரிட்டிஷ் சிப்பாய் ( 1ஆம் உலகப் போரின் போது போர் செய்தவர்) 3.ரூபா .வழங்கினார்.
MBSI தலைமையகம் திறக்கப்பட்டவுடன், ஆங்கிலேய இந்திய அரசாங்கம் புத்தர் நினைவுச்சின்னங்களை தலைமையக கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருந்த சைத்யாவில் (கோவில்) பிரதிஷ்டை செய்ய ஒப்படைத்தது. குசினாராவில் (குஷிநகரில்) புத்தர் இறந்த பிறகு, அவரது நினைவுச்சின்னங்கள் அக்காலத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட எட்டு ஸ்தூபிகளில் பதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், பேரரசர் அசோகர் அவற்றை 84,000 துண்டுகளாகப் பிரித்து, இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அவரது பரந்த சாம்ராஜ்யத்தின் மீது பல ஸ்தூபிகளில் பதித்தார் . MBSI தலைமையகம் மற்றும் தர்மராஜிகா சைத்ய விஹாராவில் உள்ள நினைவுச்சின்னங்கள் பட்டிப்ரோலு ஸ்தூபியின் கலசத்தில் இருந்து பின்னர் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டவை.
(மேலும் விவரங்கள் ஸ்ரீ தர்மராஜிகா சைத்ய விஹாராவின் வரலாறு; இந்தியாவின் மகா போதி சொசைட்டியின் வெளியீடு, 2012 இல் கிடைக்கின்றன)
கொல்கத்தாவின் சாட்டர்ஜி தெருவில் உள்ள இந்திய மகா போதி சங்கத்தின் தலைமையகம்.
இந்திய மகா போதி சங்க புத்த கயா மையம், மகாபிரஜாபதி கௌதமி சுபர்த்தி புத்த மத ஆய்வுகள் பள்ளியுடன் இணைந்து, டேராடூன் ராஸ் பிஹாரி சுபர்த்தி பல்கலைக்கழகம், மியான்மரை சேர்ந்த உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து 'புத்த கயா மற்றும் புத்த மதத்தின் உலகளாவிய மரபு' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது; செப்டம்பர் 21, 2025 அன்று புத்த கயா மையத்தில் வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமகால பொருத்தம்.