குடும்பம்

அனகாரிக தர்மபாலவின் தந்தை

மல்லிகா ஹேவா விதாரண

(1846 – 27 ஜூலை 1936)

மல்லிகா அனகாரிக தர்மபாலவின் தாயார். குடும்பத்தின் தலைவி. அவர் பௌத்தம் மற்றும் பக்தி நிறைந்த சூழலில் வளர்ந்தார். கொழும்பில் உள்ள செல்வந்த பௌத்தர்களில் ஒருவரான அவரது தந்தை அண்டிரிஸ் பெரேரா தர்மகுணவர்தன, பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்கான இயக்கத்தில் முன்னோடியாக இருந்தார். கொழும்பின் மருதானை பிரதேசத்திலுள்ள மாளிகாகந்தவில் பரந்துபட்ட காணி ஒன்றையும், பௌத்த துறவிகளுக்கான முதலாவது மடாலயக் கல்லூரியை நிறுவுவதற்கான நிதியையும் அக்காலப் புலமை மிக்க துறவியான வண. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல நஹிமி (தேரோ) யின் கீழ் அமைக்க வழங்கினார். இது வித்யோதயா ஓரியண்டல் கல்லூரி என்று அறியப்பட்டது

பெருஞ் செல்வந்த குடும்பத்தில். பிறந்தபோதும் மல்லிகா தனது வாழ்க்கையை பற்றின்மை மற்றும் துறக்கும் நெறிமுறையுடன் வாழ்ந்தார். இதனை அனகாரிக தர்மபால தனது நாட்குறிப்பில் இவ்வாறு எழுதுகிறார், போதியின் விதை அவரது தந்தையால் விதைக்கப்பட்ட அதேவேளை , அவரது தாயார் "[அவருக்கு] நிலையற்ற கொள்கையை வாரந்தோறும் போதித்தார்....". அவரது பற்றின்மை, அங்காரிகா தர்மபால குடும்பத்துடன் இணைக்கப்படுவதையும் பிணைக்கப்படுவதையும் தடுக்க விரும்பிய தேவர்களின் செயல் என்று நம்பினார்.

img

அவரது கொள்ளுப் பேத்தியான மானெல் ஹேவாவிதாரண ரத்னதுங்க 2012 இல் தனது நினைவுகளை இவ்வாறு எழுதியுள்ளார்,

“அலோ அவென்யூவில் அருகில் வசிக்கும் பெரியம்மாவை பார்க்க வாரந்தோறும் சென்றோம். … மிகவும் வயதான மல்லிகா வெள்ளை நிற புடவையில் நீண்ட கை வெள்ளை ஜாக்கெட் மற்றும் பெருமிதமான முகத்துடன், ஒரு வெள்ளை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரை ச் சுற்றி எங்களுக்குத் தெரியாத ஏராளமான மக்கள் இருந்தனர். அவரது சமையலறை வளாகத்தில் பாத்திரங்களில் கொதித்து கிடப்பதைக் கண்டேன், ஒன்று பிச்சைக்காரர்களைக் குளிப்பாட்டுவதற்கு வெந்நீரும் மற்றொன்று அவர்களுக்குச் சாப்பாடு கொடுக்க அரிசியும். அவர் பிச்சைக்காரப் பெண்களின் தலைமுடியை வெட்டி, குளித்தபின் உடுத்துவதற்குத் தன் விலையுயர்ந்த ஆடைகளைக் கொடுத்தார் என்று கேள்விப்பட்டேன்.

மல்லிகா, சக பெண்கள் குழுவின் ஆதரவுடன், தனது இளைய மகன் டொக்டர் சார்லஸ் ஹேவா விதாரண வழங்கிய நிதியில் 1920 ஆம் ஆண்டில் கொழும்பின் பம்பலப்பிட்டி பகுதியில் காணி மற்றும் கட்டிடங்களை கொள்வனவு செய்து மல்லிகா அநாத நிவாச சமித்திய என்ற முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவினார். .மல்லிகா நிவாச சமித்திய என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்பு , மல்லிகா இல்லம், சினேகா குழந்தைகள் மேம்பாட்டு மையம் மற்றும் பராக்கிரம குழந்தைகள் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது

மல்லிகாவின் வாழ்க்கை சோகத்தால் சூழப்பட்டது. பிரித்தானிய ஆட்சியாளர்களின் கைகளில் தன் மகன்மார் நாடுகடத்தப்படுதல் மற்றும் சிறைவாசம் உட்பட, அவர்கள் மரணித்ததை அவர் தனது வாழ்நாளில் காண நேர்ந்தது