இதர வெளியீடுகள்



இதர வெளியீடுகள்

தன் வாழ்க்கை மற்றும் வேலைப்பாடுகளின் தினசரி பதிவுகளுக்கு கூடுதலாக, அனகாரிக தர்மபால, அவரது காலத்தின் முக்கியமான கருத்துக்களைப் பதிவுசெய்த பல முக்கியமான வெளியீடுகளை நிறுவினார். அவை அவருடைய காலத்தின் அரசியல், சமூக, பொருளாதார, சமய மற்றும் அவரது பணிகளைப் பற்றிய முக்கியமான கருத்துக்களை கொண்டுள்ளன. 1893ஆம் ஆண்டில் இந்திய மகாபோதி சங்கத்தின் மாத இதழாக மகாபோதி மற்றும் யுனைடெட் வேர்ல்ட் ஜர்னல் ஆகியவற்றை நிறுவினார். ஐக்கிய இராஜ்ஜியத்தில், தி பிரிட்டிஷ் புத்திஸ்ட் என்ற இதழை வெளியிட்டார். இவை இன்றைக்கு 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் பல சிந்தனையாளர்களின் மற்றும் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை கொண்டுள்ளன.

1906ஆம் ஆண்டில், அனகாரிக தர்மபால, தனது பணியை, குறிப்பாக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை மற்றும் இந்தியாவில் புத்தகயாவை உலகின் பௌத்தர்களுக்காக மீண்டும் பெற்றுக்கொள்ளும் பணியை பரப்புவதற்காக சிங்கள பௌத்தா என்ற பெயரில் இலங்கையில் மகாபோதி சங்கத்தின் ஒரு வெளியீடாக நிறுவினார். அவரது ஆதரவாளரான மேரி போஸ்டர் ரரொபின்சன், அந்த செய்தித்தாளுக்கான ஆரம்ப முதலீட்டை வழங்கினார், மேலும் சிங்கள மொழியில் பிரபலமான எழுத்தாளர்கள் கட்டுரைகளை வழங்கினர். பியதாச சிறிசேன மற்றும் வலிசின்ஹா ஹரிஷ்சந்திரா ஆகியோர் சங்கத்தால் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இலங்கையில் காலனித்துவ அரசசங்கம் 'சிங்கள பௌத்தயா 'வை 1915ஆம் ஆண்டில் இராணுவச் சட்டத்தின் படி தடை செய்தது. 1922 ஆம் ஆண்டில் அது மகாபோதி சங்கத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டது.

இதனுடன் சேர்த்து, அனகாரிக தர்மபாலவின் எழுத்துக்கள் துண்டுப் பிரசுரங்கள் பத்திரிகைகளுக்கு/ செய்தித்தாள்களுக்கு (அவரது காலத்தின் பல தியோசோபிகல் பத்திரிகைகளுக்கு) பங்களிப்புகள், கடிதங்கள் மற்றும் பேச்சுகள் ஆகியவை அடங்கும். அவரது எழுத்துக்களின் முழுமையான தொகுப்பு ஒரு வெளியீடாக கிடைக்கவில்லை என்றாலும், அவரது பல எழுத்துக்களின் மாதிரிகளை ஒன்றாக இணைக்க முயன்ற பல தொகுப்புகள் உள்ளன. கலைஞர்- தூதரான டாக்டர் அனந்த குருகேயின் 1965ஆம் ஆண்டு வெளியீடு 'ரிடர்ன் டு ரைடிஒஸ்னஸ்' என்பது தர்மபாலாவின் பெரும்பாலான படைப்புகளை ஒரு தொகுப்பாக இணைக்க முயற்சித்த சிறந்த முயற்சியாகக் கருதப்படுகிறது.

img
img