(1864-1885 வரை)
21 வயதிலிருந்தே, இளம் டொன் டேவிட் ,தன்னை அங்கரிகா ("வீடற்றவர்") என்று அழைத்துக் கொண்டார், மேலும் அவரது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தைத் துறவுடன் தொடங்கினார், அதாவது ஒரு சாதாரண நபருக்கும் துறவிக்கும் இடையிலான வாழ்க்கையை வாழ்ந்தார் . அவர் கொழும்பில் உள்ள பௌத்த தியோசபிகல் சொசைட்டியில் தங்கியிருந்து, சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் பௌத்த மதத்தை பரப்புவதற்கான பணிகளை மேம்படுத்த அயராது உழைத்தார்.
அவரது மரணத்திற்குப் பிறகு ஒரு வர்ணனையாளர் இவ்வாறு எழுதியுள்ளார் .
"எதுவும் அவருக்கு மிகச் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இல்லை. அவர் தனது அறையை தானே சுத்தம் செய்து, படுக்கையை தயார் செய்து , அலுவலக வேலைகளில் ஈடுபடுவார், கடிதங்கள் அனைத்தையும் எழுதி, அவற்றைத் தானே தபாலகத்திற்கு எடுத்துச் செல்வார், அவர் ஒவ்வொருவருக்காகவும் பணி செய்வார். ஒருவருக்காக ஒரு திட்டத்தைத் தயாரிப்பார், ஒருவருக்கு ஒரு விரிவுரையை மொழிபெயர்ப்பார், செய்தித்தாளுக்கு கட்டுரைகளை எழுதுவார், அவர் பத்திரிகையின் கொள்கையை ஆசிரியருடன் விவாதித்து அவருக்குச் சான்றுகளைச் சரிசெய்வார், மேலும் அவர் நேர்காணல் செய்வார். அவர் இலங்கை முழுவதிலும் உள்ள மக்களுக்கு தலைமை அலுவலகத்திற்கு வருமாறும் மேலான பணிக்கு பங்களிப்பு செய்யுமாறும் கடிதம் மூலம் அழைப்பு விடுப்பார்.
எல்லோரும் அவருக்கு ஒரே மாதிரியாக இருந்தார்கள், ஒருவர் வயதானவராக இருந்தாலும் சரி, சிறியவராக இருந்தாலும் சரி அல்லது பள்ளிச் சிறுவனாக இருந்தாலும் சரி, கற்றவர் அல்லது அறியாதவராக இருந்தாலும் சரி, பணக்காரரா அல்லது ஏழையா என்பது முக்கியமல்ல; பொது நலனுக்காக ஒவ்வொருவரும் என்ன பங்களிக்க முடியும் என்பதை அவர் உள்ளுணர்வாக அறிந்திருந்தார். அவர் ஒரு நாளைக்கு பதினைந்து முதல் பதினாறு மணி நேரம் தீவிர வேலையில் செலவிட்டார்.
(சங்கரக்ஷிதா, பி (1952) இலிருந்து), அங்கரிகா தர்மபால: ஒரு வாழ்க்கை வரலாற்று ஓவியம், பெளத்த பப்ளிகேஷன்ஸ் சொசைட்டி, கண்டி).
1886 ஆம் ஆண்டில் அமெரிக்க இறையியல் அறிஞர் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் மற்றும் ஆங்கிலேயரான சார்லஸ் வெப்ஸ்டர் லீட்பீட்டர் (இவர் நாட்டின் மிகப்பெரிய பௌத்த மேல்நிலைப் பாடசாலையான ஆனந்தா கல்லூரியின் முதல் அதிபராக ஆனார்) அவர்களின் கல்வித் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக இலங்கை முழுவதும் பயணம் செய்தார். அவர்களுடன் மொழிபெயர்ப்பாளராகச் சென்ற இளம் அனகாரிகா. இந்த நீண்ட சுற்றுப்பயணத்தின் போது இலங்கையர்கள் - பெரும்பாலும் சிங்கள கிராமவாசிகள்: ஏழைகள், கடனாளிகள், கல்வியறிவற்றவர்கள், சுயமரியாதை இல்லாத நிலையில் காலனித்துவ ஆட்சியாளருக்கு தொடர்ந்து பயந்து வாழும் நிலை பற்றி அறிந்து கொண்டார். 1886 - 1890 வரை, சங்கத்தின் பொது மேலாளராகவும், உதவிச் செயலாளராகவும் பணியாற்றிய இளம் அனகாரிக, ஹேவாவிதாரண தர்மபால என்ற பெயரைப் பெற்றார். இந்த பெயர் பின்னர் எச். தர்மபால என்றும் பின்னர் அனகாரிக தர்மபால (சத்தியத்தின் துறந்த பாதுகாவலர்) என்றும் மாறியது.
ஒல்கொட் மற்றும் லீட்பீட்டருடன் பணிபுரிந்த இளம் அனகாரிக அவர்கள் சரசவி சந்தரேசா மற்றும் 1888 இல், தி புத்த (முக்கியமாக அவரது தாத்தா மற்றும் நண்பர்களால் நிதியளிக்கப்பட்டது) தொடங்கியபோது அச்சிடுதல் மற்றும் வெளியீட்டிற்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார். 1889 ஆம் ஆண்டு ஒல்கொட்டுடன் ஜப்பான் சுற்றுப்பயணத்தில் தொடங்கி, பௌத்த மதத்திற்கான அவரது இடைவிடாத பணியால் தர்மபாலவின் வாழ்க்கை மாற்றமடைந்தது. அவர்கள் ஜப்பானைச் சுற்றி விரிவுரைகளை வழங்கினர். மற்றும் புகழ்பெற்ற இலங்கை அறிஞர்- துறவி வென் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரரின் 'நல்வாழ்த்துக்கள் ' என்ற கடிதத்தை ஜப்பான் பௌத்தர்களுக்கு சமஸ்கிருதத்தில் எழுதி வழங்கினர் . தென்னிந்திய பௌத்த பாரம்பரியத்தின் (தேரவாத) துறவி ஒருவர் வட மரபு (மகாயானம்) க்கு இதுபோன்ற காலங்களில் எழுதிய முதல் கடிதம் இதுவாகும்.
ஆங்கிலேயர் சேர் . எட்வின் ஆர்னல்ட் எழுதிய "லைட் ஒஃப் ஏசியா" என்ற புகழ்பெற்ற கவிதையைப் படித்ததை தொடர்ந்து, 26 வயது இளம் தர்மபாலவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது, அந்த நேரத்தில் அர்னால்ட், சாக்கிய இளவரசர் கௌதமர் புத்தராக ஞானம் பெற்ற, புத்தகயா சென்றதை பிரிட்டிஷ் செய்தித்தாளுக்கு எழுதினார். இதேவேளை , இந்தியாவில் கௌதம புத்தரின் பாத ஸ்பரிசத்தால் புனிதமான பல இடங்களை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக செய்தித்தாள்களில் ஒரு கட்டுரையும் வந்தது. 1891 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஜப்பானிய துறவியான கோசன் குணரதனன் உட்பட ஒரு சிறிய குழுவினருடன் மீண்டும் தர்மபால புத்த கயாவுக்கு பயணம் செய்தார்.
இதேவேளை , அந்த உத்வேகத்துடன், புத்த கயாவை புத்த வழிபாட்டுத் தலங்களாக மீட்டெடுக்கும் தர்மபாலவின் புனிதப் பணி தொடங்கியது. இதற்காக அவர் 1891 ஆம் ஆண்டு கொழும்பில் மகா போதி சங்கத்தை நிறுவினார். வண., ஹிக்கடுவே சுமங்கல தேரரை ஸ்தாபகத் தலைவராகவும், தன்னைச் செயலாளராகவும் நியமித்தார். அதனை தொடந்து புத்த கயாவை மீட்பது அவரது வாழ்க்கையின் முதன்மையான பணியாக மாறியது.
தர்மபால கயாவிலிருந்து திரும்பும் பயணத்தில், அவர் சமயவாதிகளின் அழைப்பின் பேரில் ஹொனலுலுவில் தரித்து நின்றார் . அங்கு அவர் சமயவாதியான திருமதி மேரி ரொபின்சன் ஃபாஸ்டரை சந்தித்தார், அவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் அவரது பிரதம சீடராக மாறினார் .