அனகாரிக தர்மபாலரின் வாழ்க்கை

(17th of September 1864 – 29th of April 1933)

பரம்பரை

அனகாரிக தர்மபாலவின் வாழ்க்கை ஒருசெயல்வீரர்> மிஷனரி> சுதந்திரபோராளி> சமூகசீர்திருத்தவாதி மற்றும் துறவி என பல பரிமாணங்களை கொண்டிருந்தது.

அவர் காலனித்துவ ஆட்சியாளர்களின் சமூக-மதக்கோட்பாடுகள் உலகம் முழுவதும் ஆட்சி செய்த காலத்தில் புத்தரின் போதனையை பரப்ப முனைந்தார். அவருடைய காலத்தில் புத்தமதத்தை பொதுமக்களின் நினைவில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

img

காலனித்துவ ஆட்சியாளர்களின் பயன்பாட்டிற்கான கோட்பாடுகள் மற்றும்கட்டமைப்புக்களை பயன்படுத்தினார். கேர்னல் ஒல்கொ ட்டின் வழியில், கிறிஸ்தவ ஞாயிற்றுக்கழகங்கள் இருந்த இடத்தில், அவர் பெளத்த ஞாயிற்றுக்கழகங்களையும் பெளத்த குழந்தைகளுக்கான பள்ளிகளையும் உருவாக்கினார். கிறிஸ்தவ மிஷனரிகள் நிறுவிய பள்ளிகளைப் போலவே பெளத்த மதத்தின் குழந்தைகளுக்கான பள்ளிகளை உருவாக்கினார். மற்றும் உள்ளூர் சுதேச ஆடைகளை நாணமாகக் கருதும் மனப்பாங்குமாற வேண்டும் என்று எடுத்து க்காட்டினார். மிகவும் முக்கியமாக, அவர் புத்தரின் போதனைகளின் தனித்துவத்தை உணர்ந்து புத்தமதத்தின் சுயத்தை மீண்டும் உயிர்ப்பித்தார்.

சர்வதேச கண்ணோட்டம் கொண்டவராக அவர் நிறுவிய மகாபோதி சங்கத்தை வைத்தே உலகம் முழுவதும் புத்த மதத்திற்கு ஒரு சமுதாயத்தை உருவாக்கினார். இந்த அமைப்பு ஒரு கொடியின் கீழ் உலகமெங்கும் புத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னோடி அமைப்பாக உருவானது.

அவர் பயணம் மேற்கொண்ட நாட்களில் தனது பார்வையையும் செய்தியையும் பரப்பியதோடு மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முக்கிய நிறுவனங்களைப் பார்வையிட்டார். அதன்மூலம், அவர் தனது காலத்தின் முக்கிய சிந்தனையாளர்கள் மற்றும் செயல்வீரர்களை சந்தித்து உரையாடினார்.

இந்தியாவில் சுவாமி விவேகானந்தர், தாகூர் மற்றும் காந்தி, ரங்கூன், சியாம், ஜப்பான் அரசகுடும்பம் மற்றும் தலைவர்கள், ரிஸ்டேவிஸ் மற்றும் சேர்எட்வின்ஆர்னால்ட்போன்ற கல்வியாளர்கள், அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் நிறுவனர் போன்ற கல்வியாளர்கள் இவர்களில் சிலர்.

அவரதுபணி தொடர்பாக வெளியீடுகள், மொழிபெயர்ப்புகள் கல்வி மற்றும் சமூகங்களுக்கு இடையேயான உரையாடல்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்.

அனகாரிக தர்மபாலவின் பல்வேறு பணிகளால் பல்வேறு வரலாறுகள் உருவாகின. அதேசமயம் சிலர் அவருடைய கண்ணோட்டத்தை சிதைக்கவும் வாய்ப்பு வழங்கியது. சிலர் அவரது சொற்களை சாதாரணமாக மேற்கோள்காட்டாமல் சரியான மேற்கோள்களை எடுக்காமல் பிரச்சாரமான சொற்களுடன் சரியானது அல்லது தவறானது என்பதை குறிப்பிடாமல் பயன்படுத்தியுள்ளனர்.

அனகாரிக தர்மபால அறக்கட்டளை அவரது சொற்களை நம்பகமான மூலங்களால் மேற்கோள்கள் கொடுக்காத, தவறானஅறிக்கைகளை, பாகங்களாக எடுத்துக் கொண்ட மற்றும் பொருளாதார நலனுக்கு பயன்படுத்துபவர்களை ஆதரிப்பதில்லை. இலங்கை மற்றும் உலகம் முழுவதும் புகழ்பெற்ற புத்தரின் போதனைகளை பரப்புவதற்கு ஒருஉலகத்தை உருவாக்குவதாக அனகாரிக தர்மபால நினைத்தார். அந்தப் பாரம்பரியமே அனகாரிக தர்மபால எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல விரும்பியதாகும் .